மீண்டும் சர்ச்சையில் சிக்கிய போரிஸ் ஜோன்சன்!
ஆப்கானிஸ்தானில் இருந்து விலங்குகளை வெளியேற்ற பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதியன்று கொரோனா முடக்கலின்போது, பிரதமரின் வளாகத்தில்,(டவுனிங் ஸ்ட்ரீட்) இடம்பெற்றதாக கூறப்படும் விருந்துபசாரம் தொடர்பில் போரிஸ் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், போரிஸ் ஜோன்சன் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளமை பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் மக்கள் வெளியேற்றப்பட்டபோது, காபூலில் இருந்து விலங்குகளையும் வெளியேற்றுவதில் அவர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றுவதை விட விலங்குகளுக்கு முன்னுரிமை அளித்தீர்களா? என்று எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு "அது முழு முட்டாள்தனம்" என்று ஜோன்சன் பதிலளித்து குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.