கனடாவில் இடம்பெற்ற "போரின் சாட்சியம்” நூல் வெளியீடு
இறுதிப்போரில் களத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் வான்கூவரில் நடைபெற்றுள்ளது.
இவர் 2009ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முல்லைத்தீவின் வலைஞர் மடத்திற்கும் இரட்டைவாயக்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பணி நிமிர்த்தம் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்திருந்தார்.
போரின் பின்னர் தாய்லாந்திலிருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூலம் அகதியாக கனடாவைச் சென்றடைந்துள்ளார்.
வசதிகள் இன்மை
கடல் பயணத்தின் போது, ஏற்கனவே அடைந்திருந்த காயத்தின் பாதிப்புக்களாலும் கப்பலில் போதிய மருத்துவ வசதிகள் இன்மையாலும் உயிராபத்தினையும் எதிர்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இறுதிப் போரின் போது தான் கண்ட மற்றும் ஆதாரபூர்வமாக கேட்டறிந்த தகவல்களைத் தொகுத்து "போரின் சாட்சியம்" எனும் நூலை தொகுத்துள்ளார்.
நூலின் முதற்பிரதியினை கனடாவின் முடியரசு - பழங்குடிகள் உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியிடம் நூல் ஆசிரியர் கடந்தவாரம் கையளித்துள்ளார்.