ஓமான் மீது குண்டுதாக்குதல்.. ட்ரம்ப் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் ஓமான் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டுவீசப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஈரானும் ஓமானும் பேச்சுவார்த்தை நடத்தி முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
சரணடைதல்..
இந்நிலையில், ஓமான் குறுக்கிட்டால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கான இரண்டு மாத கால அவகாசம் எந்த திருப்புமுனையும் இன்றி முடிவடைந்த நிலையில், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நீண்டகால பங்காளியாகவும் அமைதிப் பேச்சுவார்த்தை மத்தியஸ்தராகவும் திகழும் ஓமான் மீது ட்ரம்ப் விடுத்துள்ள இந்த மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.