புதுடெல்லிக்கு வெடிகுண்டு மிரட்டல்... மீண்டும் சர்ச்சை!
இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஆறு இடங்களை குறிவைத்து திட்டமிடப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
1992ஆம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தின் போது, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி அழிக்கப்பட்டது.
செங்கோட்டை குண்டுவெடிப்பு
அதேநேரத்தில், பாபர் மசூதி அழிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக புதுடெல்லியில் ஆறு இடங்களில் இந்த வெடிப்புகளை நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புப் படைகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தத் திட்டங்கள் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 10ஆம் திகதி (10.11.2025) புதுடெல்லியின் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதோடு 24 பேர் காயமடைந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |