விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர கதவு வழியாக பயணிகள் வெளியேற்றம்
இண்டிகோ இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை 5.35க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தனி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவசர வழியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை
டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களால் விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், விமானத்தில் சந்தேகத்திற்கிடமான எந்தவித பொருட்களும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
