டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியாவின் புது டெல்லியில் உள்ள 100 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் செய்தி வந்ததாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
நேற்று அதிகாலை 4.00 மணியளவில் அனைத்து பாடசாலைகளின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கும் குறித்த செய்தி கிடைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலால் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை அதிபர்கள் மற்றும் புதுடெல்லி பொலிஸார் கூட்டாக பாடசாலைகளை மூடி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறப்பு சோதனை
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்த அனைத்து பாடசாலைகளிளும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு குழுவினர் நடத்திய சிறப்பு சோதனையில் இது போலி மிரட்டல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட இடத்தை டெல்லி பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக புதுடெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் இந்த மின்னஞ்சல் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் செய்தி புதுதில்லியில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு ஒரு நாள் முன்னதாக வந்ததாகவும் மேலும் சில நாட்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கும் வந்ததாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri
