பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் குறித்து பொலிஸார் அறிவிப்பு
பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சில பொலிஸ் நிலையங்களினால் நீதிமன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது.
இந்த போராட்டங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் எனவும், இதனால் போராட்டத்திற்கு தடை விதிக்குமாறு கோரியும் நீதிமன்றில் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தினை இலக்கு வைத்து பயங்கரவாத அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் இடம்பெறக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர், பொலிஸ் பரிசோதகர் சமந்த திலுக் தில்ஷான் கடந்த 9ம் திகதி கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
இந்த நிலையிலேயே கோவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய போராட்டம் நடாத்துவதற்கு அனுமதியளிக்க முடியாது எனவும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனால் இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
