முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிக்க வைத்து தகர்க்கப்பட்ட வெடிகுண்டு
முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தெரிவித்த தகவலுக்கு அமையச் சம்பவ இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்றபோது குறித்த பகுதியில் இராணுவத்தினர் குண்டு ஒன்றைச் செயலிழக்க செய்தமை தெரியவந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் பகுதி மணல் தரையிலிருந்து மீட்கப்பட்ட குண்டு ஒன்றே இவ்வாறு இராணுவத்தினரால் வெடிக்க வைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆங்காங்கே காணப்படும் வெடிபொருட்களை மீட்கும் இராணுவத்தினர் மற்றும் அதிரடிப்படையினர், பொலிஸாரும் இணைந்து அதனை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக செயலிழக்க செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri