கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் இல்லம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

Sheikh Hasina Bangladesh Shakib Al Hasan
By Shadhu Shanker Aug 05, 2026 06:48 PM GMT
Report

இந்தியாவில் தங்கியுள்ள பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடன் இணையவழி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல் இரவு சுமார் 8.45 மணியளவில், பங்களாதேஷின் மகுரா நகரிலுள்ள கேஷாப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் திருப்பம்: சாரா ஜஸ்மினின் உடல் தொடர்பில் நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் திருப்பம்: சாரா ஜஸ்மினின் உடல் தொடர்பில் நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

தாக்குதலின் போது வீடு சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், இந்தியாவின் நியூ டெல்லியில் நடைபெற்ற வெளிநாட்டு செய்தியாளர்கள் கழகத்தின் (Foreign Correspondents' Club) ஏற்பாட்டில் ஷேக் ஹசீனா இணையவழியாக உரையாற்றியதையடுத்து இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து அவாமி லீக் வெளியிட்ட அறிக்கையில், "அவாமி லீக் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதற்கான விலையாக வீடுகள் தீவைக்கப்படுகின்றன. புதிய பாசிசம் பங்களாதேஷை ஆட்கொண்டுள்ளது" எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், "ஷகிப் அல் ஹசனின் இல்லம் மீது நடத்தப்பட்ட இந்த பெட்ரோல் குண்டுத் தாக்குதல், ஜனநாயகத்தை உருவாக்குவதாகக் கூறி அவாமி லீக் ஆதரவாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட வன்முறையின் மற்றொரு எடுத்துக்காட்டாகும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் பாதுகாப்பு வெள்ளை அறிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு

ஜப்பானின் பாதுகாப்பு வெள்ளை அறிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு

ஷேக் ஹசீனா

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஷேக் ஹசீனா, இந்த ஆண்டு டிசம்பரில் பங்களாதேஷ் திரும்புவேன் என்றும், கைது செய்யப்படவோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலும்கூட அதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

"எனது திரும்புவது அதிகாரத்திற்காக அல்ல. பங்களாதேஷை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் வளமான பாதைக்கு கொண்டு செல்வதற்காகவே."என்று அவர் கூறினார்.

கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் இல்லம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் | Bomb Attack At Shakib Al Hasan S House

மேலும், "என்னை சிறையில் அடைக்கலாம், கொல்லவும் கூட முடியும். ஆனால் நான் என் மக்களுடன் இருப்பதற்காக நாடு திரும்புவேன். நான் முடிவு செய்துவிட்டேன்." எனவும் அவர் தெரிவித்தார். 2024 ஒகஸ்ட் 5ஆம் திகதி அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்த பின்னர், ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பரில், 2024 மாணவர் போராட்டங்களை ஒடுக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்" என்ற குற்றச்சாட்டில் டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆஜராகாத நிலையில் மரண தண்டனை விதித்தது.

கம்மன்பில, விமல் உள்ளிட்ட சிலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கம்மன்பில, விமல் உள்ளிட்ட சிலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 பலமுறை கோரிக்கை

அதன் பின்னர், அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்தி ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் அரசு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, "பங்களாதேஷில் வீடுகள், பணியிடங்கள், கல்வி நிலையங்கள் அனைத்திலும் அச்சம் நிலவுகிறது. ஜனநாயகத்திற்கும் நீதிக்கும் போராடும் மக்களுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளிக்க வேண்டும்" என ஷேக் ஹசீனா சர்வதேச சமூகத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் இல்லம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் | Bomb Attack At Shakib Al Hasan S House

இந்த இணையவழி செய்தியாளர் சந்திப்பில், அவரது மகன் Sajeeb Wazed Joy மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் Mohibul Hasan Chowdhury Nowfel உள்ளிட்ட அவாமி லீக் தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றது தொடர்பாக, அதற்கு விளக்கம் கோரி பங்களாதேஷ் அரசு இந்தியாவிடம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US