கொத்மலை பகுதியில் 500 அடி பள்ளத்தில் பாய்ந்து கெப் வாகனம் கோர விபத்து! ஒருவர் பலி
நுவரெலியா- கொத்மலை கொட்டகபிட்டிய பகுதியில் கெப் வாகனம் ஒன்று சுமார் 500 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (22.10.2026) மாலை சுமார் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழப்பு
கொத்மலை கொட்டகபிட்டிய பகுதியிலிருந்து கடதொர பகுதியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 54 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் கொட்டகபிட்டிய வடக்கு, கடதொர பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான 50 வயதுடைய பெண் ஒருவர், சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அட்டபாகே 17ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் News Lankasri
உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்! இனியும் தவிர்க்காதீங்க Manithan