பொகவந்தலாவ - கியூ தோட்டம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் ஜூபிலி பெருவிழா
பொகவந்தலாவ - கியூ தோட்டம், புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா எதிர்வரும் 29ஆம் திகதி பக்திப்பூர்வமாக கொண்டாடப்படவுள்ளது.
கண்டி மறை மாவட்ட ஆயர், வணக்கத்திற்குரிய வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையின் தலைமையில் இந்த ஜூபிலி விழா கொண்டாடப்படவுள்ளது.
ஜூபிலி பெருவிழா
எதிர்வரும் 22ஆம் திகதி பொகவந்தலாவ பங்கின் பங்குத் தந்தை டொஸ்மின் ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் ஜூபிலி பெருவிழா ஆரம்பமாகும்.
தொடர்ந்து ஏழு நாட்கள் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று 29ஆம் திகதி மறைமாவட்ட ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையினால் ஜூபிலி விழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

நவநாள் ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள், பொகவந்தலாவ பங்கின் பங்குத் தந்தை அருட்பணி டொஸ்மின்ராஜ், அருட்தந்தைகளான, அந்தனி பெர்னாண்டோ, எட்வின் ரொட்றிகோ, டக்ளஸ், ஸ்டீபன், எண்டன் கவஸ்கர், இயேசுதாசன், சிவந்த ரொட்றிகோ ஆகியோரால் ஒப்புக்கொடுக்கப்படும்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan