இலங்கையில் உடல் பருமனால் அவதியுறும் பலர்! வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் 15 வீத பெண்களும், 6.3 வீத ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண்களிடையே எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணரான சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.
செய்தி மாநாட்டில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
உடல் பருமன் அதிகரிப்பு
மேலும் தெரிவிக்கையில், பெண்கள் மத்தியில் உடல் பருமன் மற்றும் எடை 2021ஆம் ஆண்டில் 43 வீதமாக அதிகரித்திருந்தது.
இதன்போது ஆண்களை பொறுத்தவரையில், உடல் பருமன் அதிகரிப்பது தொடர்பில், 2015ஆம் ஆண்டில் பதிவான 24.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உடல் நிறை குறியீட்டெண் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின் படி, ஆரோக்கியமான ஒருவரின் பி.எம்.ஐ என்ற உடல் பருமன் கணக்கீடு 18.5 முதல் 24.9 வரை இருக்க வேண்டும்.
30க்கு மேற்பட்டவர்களின் பி.எம்.ஐ 25 முதல் 29.9க்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
ஆசிய நாடுகளில் உள்ளவர்களின் பி.எம்.ஐ 18.5 முதல் 23 ஆகப் பராமரிக்க வேண்டும். அது 23ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உணவு முறையே நேரடியாக உடல் பருமன் மற்றும் அதிக எடைக்கு வழிவகுக்கும்.
பாதிப்புக்கள்
மேலும் இதய நோய்கள், நீரிழிவு, நுரையீரல் நோய்கள் மற்றும் சில வகையான
புற்றுநோய்கள் போன்ற பல்வேறு மருத்துவ நிலைமைகள் உடல் பருமனால் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
