வத்தளையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு
கொழும்பு - வத்தளை பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (30.04.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவரின் அடையாளங்கள்
இதேவேளை உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் பழுப்பு நிற சேலை மற்றும் வெள்ளை நிற நீண்ட கை சட்டை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த பெண்ணின் சடலமானது பிரேத பரிசோதனையின் பின்னர் ராகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

இன்னும் கூலி படம் Houseful தான், 7வது நாள் இதுவரைக்கும் Ticket கிடைக்கல... ரசிகர்கள் கொண்டாட்டம் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
