வவுனியாவில் ஏழு வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்றைய தினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து ரியூசன் செல்வதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரை காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சிறுவன் அயல் வீட்டு கிணற்றில் சடலமாக இருக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன்,சிறுவனின் புத்தகப்பை வீட்டிற்கு அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ப.அபிசக் என்ற 7 வயது சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் தாயார் வெளிநாடொன்றில் வசித்து வரும் நிலையில், தந்தை மற்றும் அப்பம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.சம்பவ தினம் தந்தையார் வீட்டில் இருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




