பாலமுனை- மலையடி பகுதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காண நடவடிக்கை
புதிய இணைப்பு
பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் பலநாட்களாக மரமொன்றில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை இனங்காண பொதுமக்களின் உதவியை அக்கரைப்பற்று பொலிஸார் நாடியுள்ளனர்.
மேலும் குறித்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தவிர எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் எதாவது முறைப்பாடு உள்ளதா என்பதை கண்டறிய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
அம்பாறை (Ampara) - பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு தகவல்
இன்று (05.03.2025) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை - முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் ஒரு கிழமைக்கு முன்னர் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக சந்தேகத்துடன் அப்பகுதிக்கு சென்ற சிலர் குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது, 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. மேலும், இம்மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

லண்டனில் இந்திய வெளியுறவு அமைச்சர் மீது தாக்குதல் நடத்த முயற்சி: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி News Lankasri

ரஷ்யாவின் இளைஞர்படை ராணுவத்தில் உக்ரேனியர்கள்! நாசவேலை முயற்சியை முறியடித்ததாக அறிக்கை News Lankasri
