கொழும்பில் மர்மமான முறையில் வெளிநாட்டவர் உயிரிழப்பு!
தெகிவளைப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சீன நாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சீன நாட்டவர் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தெகிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் படி, தெகிவளை அல்விஸ் வீதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் சீன நாட்டினர் குழு ஒன்று இந்த வீட்டிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்வாறிருக்க, உயிரிழந்தவரின் சடலம், கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து தெகிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
