மட்டக்களப்பில் தனிமையில் இருந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள கிணற்றில் வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஆசிரியையான 71 வயதுடைய வினோதா ஜெகநாதன் என்பவரே இவ்வாறு இன்று(23.12.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் உள்ள வீட்டில் ஓய்வுப் பெற்ற குறித்த ஆசிரியை தனிமையில் வசித்து வந்துள்ளார்.
வீட்டிலிருந்த பணிப்பெண் வெளியில் சென்று வீடு திரும்பிய நிலையில், குறித்த ஆசிரியரை காணாமல் தேடிய போது, கிணற்றுக்குள் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடயவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர், சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam