திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை - கிவுளக்கட குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இளைஞரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (28) இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் காதல் விவகாரத்தினால் விரக்தி அடைந்த நிலையில் தூக்கில் தொங்கியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுராதபுரம்-குகுலாகுளம பகுதியைச் சேர்ந்த இஷாரா நவிது (26வயது) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணை
அந்நபர் யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில், வீட்டாருக்கு விருப்பம் இல்லாத நிலையில், இருவருக்கிடையில் தகராறு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இளைஞர் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri
