மின்விசிறி விழுந்து மூன்று வயது சிறுவன் பரிதாப மரணம்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் மின்விசிறி விழுந்ததினால் 3 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல் வீதியில் சிறுவன் வசிக்கும் வீட்டிலிருந்தே முஹம்மத் ரிழ்வான் என்ற குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுவனின் தாய் குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது சிறுவன் படுத்து கிடந்ததாகவும் சிறுவனுக்கு மேல் வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.
சிறுவனை எழுப்பிய போது சிறுவன் எழும்பாத நிலையில் அயலவர்களின் உதவியுடன் சிறுவனை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிறுவனின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri