கிளிநொச்சி விபத்தில் பலியான நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு (PHOTOS)
கிளிநொச்சி - கண்டாவளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஏ 35 வீதியின் கண்டாவளை பகுதியில் நேற்றைய தினம் (25-02-2023) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 6 பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய கதிரவேலு யாதவராசா உயிரிழந்தார்.
அவரது சடலம், பிரேதப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (25-02-2023) ஒப்படைக்கப்பட்ட நிலையில், குறித்த சடலம் இன்றைய தினம் (26.02.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை
கிளிநொச்சி பரந்தன் முல்லைதீவு ஏ 35 வீதியின் கண்டாவளை பகுதியில் குறித்த விபத்து பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அதாவது பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த பார ஊர்தியில் எதிர்த்திசையிலிருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்துக்குக் காரணமான சந்தேகத்தின் பேரில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
