பாலமுனையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்: அடையாளம் கண்டுள்ள உறவினர்கள்
பாலமுனை - முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று (6) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை - முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டிருந்தது.
காணாமல் போன நபர்...
இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் நேற்று (06) அம்பாறை தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடயவியல் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கரைப்பற்று அலிக்கம்பை பகுதியில் ஏரப்பன் ராமன் (69 வயது) என்பவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளவர், காணாமல் போன தங்கள் உறவினர் என சம்பவ இடத்திற்கு சென்றவர்கள் அடையாளம் காட்டினர். இம்மரணம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க போலியான முகத்திரையை அணிவதில் கில்லடிகளாம்.. உங்க நட்சத்திரம் என்ன? Manithan

நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை, ஓபனாக கூறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை... என்ன இப்படி சொல்லிட்டாங்க Cineulagam

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri
