சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை

Negombo Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Dhayani Jul 08, 2026 06:16 AM GMT
Report

புதிய இணைப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்களுக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.

குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இதன்போது அங்கு கூடியிருந்த சக சிறைச்சாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் தமக்கு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தகுந்த நீதி பெற்றுத்தரப்பட வேண்டும் என கண்ணீர் மல்க நீதி அமைச்சரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராக எந்தவித சட்ட அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குறித்த அதிகாரி அன்றைய தினம் துரிதமாகச் செயற்பட்டு, துப்பாக்கிப்பிரயோகம் செய்யாதிருந்திருந்தால், அங்கு மிகப்பெரிய பேரழிவும் பெரும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்தே அவர் அவ்வாறு செயற்பட வேண்டியிருந்தது என்பதையும் அவர்கள் அமைச்சருக்கு விளக்கியுள்ளனர்.

இதன்போது அதிகாரிகளின் உணர்வுபூர்வமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த நீதி அமைச்சர், இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருக்கும் நியாயம் பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.    

இரண்டாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடல்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் சிறை சிறப்பு நடவடிக்கை பிரிவின் 7 அதிகாரிகள் சிறைக்கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழ்நதனர்.

இந்த மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை | Bodies Of Prison Officers Killed In Colombo

முதலாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறையில் நேற்று முன் தினம் (06) இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த ஏழு சிறை அதிகாரிகளின் உடல்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பொரல்லை சிறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன் தினம் (06) நீர்கொழும்பு சிறைக்குள் ஏற்பட்ட மோதலில் ஏழு சிறை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்திருந்தனர்.

வெளியான பரபரப்பு தகவல்.. வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இன்றிரவு கைதிகளை தாக்க திட்டமா!

வெளியான பரபரப்பு தகவல்.. வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இன்றிரவு கைதிகளை தாக்க திட்டமா!

இறுதி அஞ்சலி

இந்நிலையில், இவர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கொழும்பிற்கு எடுத்துச்செல்லப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை! கண்ணீருடன் விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை | Bodies Of Prison Officers Killed In Colombo 

மேலும், மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரி எஸ். எச். எஸ். சந்திரவன்ச, வார்டன்கள் எஸ். டி. எஸ். அபேவன்ச, ஏ. டி. தரங்கா, டி. எம். ஆர். திலகசிறி, பி. என். என். தரங்கா, டி. டட்லி, புஷ்ப குமார மற்றும் ஆர். பி. ஆர். சஞ்சீவ ஆகியோரின் உடல்களும் இதே முறையில் எடுத்துச்செல்லப்பட உள்ளன.

இந்த மோதலில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், 58 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நுழைந்த தந்திரோபாயப் படை.. கைதிகளிடம் சிக்கிய ஆபத்தான ஆயுதங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நுழைந்த தந்திரோபாயப் படை.. கைதிகளிடம் சிக்கிய ஆபத்தான ஆயுதங்கள்

சிறை வன்முறையை விவகாரத்தில் நீதியமைச்சர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சிறை வன்முறையை விவகாரத்தில் நீதியமைச்சர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

you may like this video  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US