பெருந்தொகை போதைப்பொருளுடன் இலங்கை படகுகள் பறிமுதல்! 12 பேர் கைது
இந்திய கேரளா- விஜின்ஜாம் கடற்கரையில் இந்திய கடலோர காவல்படையினரால் சுமார் 300 கிலோ போதைப்பொருள் கொண்ட மூன்று இலங்கை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன,
இதன்போது 12 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகுகளில் இருந்து இருநூறு கிலோ கொக்கையின், 60 கிலோ ஹாஷிஷ் மற்றும் சில உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விசாரித்த பின்னரே விவரங்கள் வெளியிடப்படும் என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பை இந்திய கடலோர காவல்படை உடனடியாக வெளியிடவில்லை.
ஆரம்ப அறிக்கையின்படி, கடலோர காவல்படை மூன்று படகுகளை சுற்றி வளைத்தபோது அவற்றில் இருந்து அதிக அளவு போதைப்பொருட்கள் கடலில் வீசப்பட்டன.
19 பேர் இந்தப்படகுகளில் பயணித்தபோதும் அவர்களில் ஏழு பேர் கடலில் குதித்தனர், அவர்களைக் கண்டுபிடிக்க உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் தேடுதல் நடைபெறுகிறது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
