இந்தோனேசியாவில் 100 பயணிகளுடன் கடலில் மூழ்கிய படகு: மீட்பு பணி தீவிரம்
பங்களாதேஷில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இந்தோனேசியாவிற்கு செல்ல முயற்சித்த 100ற்கும் மேற்பட்டவர்கள் கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த பயணிகள் தொடர்ப்பில் தகவலிருந்த இந்தோனேசிய பாதுகாப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பங்களாதேஷில் இருந்து ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத பயணம்
சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் குறித்த படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதற்கமைய இது தொடர்பில் தகவலறிந்த இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |