போக்குவரத்து துறையில் புதிய திட்டத்தை நடைமுறைபடுத்த நடவடிக்கை
பொது - தனியார் கூட்டாண்மையின் கீழ் படகு சேவைகளை ஆரம்பிக்க தனியார் முதலீட்டாளர்களை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது.
இலங்கை நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் ஓட்டங்கள் நிறைந்த ஒரு தீவு என்பதால், சுற்றுலாத் துறையையும் நகர்ப்புற பயணிகள் போக்குவரத்தையும் மேம்படுத்த,வாய்ப்பு உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
எனவே, நாட்டுக்குள்ளே இருக்கும் நீர் ஓட்டங்கள் மற்றும் கடற்கரையைப் பயன்படுத்தி பல பகுதிகளை உள்ளடக்கிய படகு சேவையை ஆரம்பிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
படகு சேவை
அதன்படி, புத்தளம் - கோட்டை, கோட்டை- காலி மற்றும் காலி - மாத்தறை இடையே கடற்கரை போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கவும், இதன் மூலம், சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
மேலும், ஹமில்டன் எலா, பேரே வாவி தியவன்ன ஓயா மற்றும் மது காகா போன்ற சாத்தியமான நீர் வளங்களைப் பயன்படுத்தி, சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முன்மொழியப்பட்ட குறித்த திட்டங்களை, பொது-தனியார் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்துவதற்கும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
