குளத்தில் தாமரை மலர் பறிக்கச் சென்ற ஒருவர் பலி! இருவர் தீவிர சிகிச்சையில்
அனுராதபுரம் - எப்பாவல பகுதியில் உள்ள குளமொன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெடியாவ குளத்திலேயே நேற்று( 15.10.2026) இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் எப்பாவல - கட்டியாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
தாமரை மலர்களைப் பறிக்கச் சென்றபோது படகு எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் மூவரையும் மீட்டுத் தம்புள்ளை வீதியில் அமைந்துள்ள எப்பாவல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்தாரா என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
[8IA60K[
அதேவேளை, ஆபத்தான நிலையிலிருந்த ஏனைய இரு நபர்களும் மேலதிக தீவிர சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.