மீன்பிடி திணைக்களத்தின் அறிவுறுத்தலை மீறி கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி(Photos)
மட்டக்களப்பு முகத்துவாரம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் காணாமல்போயுள்ள நிலையில் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்ற போது, குடும்ப நிலைமை காரணமாக நேற்று (30.01.2023) இரவு மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிச் சென்றவர்களின் படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
நேற்றைய தினம் மீன்பிடி திணைக்களத்தினால் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும் குறித்த கடற்தொழிலாளர்கள் குடும்ப வறுமை காரணமாக மீன்பிடிக்கு சென்றுள்ளனர்.
இருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்
இந்த நிலையில் கடல் குழப்பம் காரணமாக படகு கவிழ்ந்துள்ள நிலையில் இருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திராய்மடு பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இருதயநாதன் அந்தோனி (41வயது) என்பவரே காணாமல்போயுள்ளார்.
காணமல்போனவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் எனவும் காணாமல்போனவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
கடல் சீரற்ற நிலை
இது தொடர்பில் மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடல் சீரற்ற நிலையில் உள்ளதன் காரணமாக தேடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலையுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றமாகவுள்ளதனால் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வானிலை அவதான
நிலையமும் மீன்பிடி திணைக்களமும் தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
