Blue Ocean குழுமமானது தனது மதிப்புமிக்க KING ALFRED PALACE இற்கான பரிமாற்ற பத்திர வழங்கலை நிறைவு செய்தது
இலங்கையின் real estate துறையில் முன்னிலை வகிக்கும் Blue Ocean குழுமம், தனது புகழ்பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு திட்டமான King Alfred Palace இன் பரிமாற்ற பத்திர (Deed of Transfer) வழங்கல் வெற்றிகரமாக நிறைவடைந்ததை பெருமையுடன் அறிவிக்கிறது.
கொழும்பு 03 இல் உள்ள இல. 45, அல்பிரட் ஹவுஸ் கார்டன்ஸ் என்ற விலாசத்தில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பானது, உயர்தர வீடமைப்பு வசதிகளை பிரதிபலிக்கும் முக்கிய திட்டமாக திகழ்கிறது.
Blue Ocean குழுமமானது, Link Engineering, Blue Ocean Residencies, Kelsey Homes, Link Ready-mix, Contessa மற்றும் Blue Ocean Facility Management போன்ற முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய பரந்த வணிக இலாகாக்களுடன் நாட்டின் முன்னணி real estate நிறுவனமாக விளங்குகிறது.
பல ஆண்டுகளாக அனைத்து தொழில்சார் நெறிமுறைகளையும் கடைபிடிக்கும், உயர்தரமான கட்டுமான வேலைகள், மற்றும் வாடிக்கையாளர் அணுகுமுறையுடன் ஒரு உன்னதமான பெயரை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இலங்கையின் 20க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் 235க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் 3500 குடியிருப்பு பிரிவுகளை உருவாக்கியுள்ள Blue Ocean குழுமம், நவீன வடிவமைப்பு, பன்னாட்டு தரநிலைகள் மற்றும் உயர்தரமான பொருட்களுடன் கூடிய அபிவிருத்திகளை வடிவமைத்து நாட்டின் வான்படலத்தை மாற்றியமைத்து வருகிறது.
கொழும்பில் அமைந்துள்ள King Alfred Palace ஆனது, Blue Ocean குழுமத்தின் சிறப்புத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய உதாரணமாக விளங்குகிறது.
கொழும்பு நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பானது, மதிப்புமிக்க சொத்து மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய வசதிகளை வழங்குகிறது.
King Alfred Palace இன் பரிமாற்ற பத்திர வழங்கல் நிகழ்வானது, Blue Ocean குழுமத்திற்கும் மற்றும் இந்த பிரத்தியேக சொத்துக்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் முக்கியமான ஒரு மைல்கல்லாகும்.
வாடிக்கையாளர்களுக்கான எளிமையான, வெளிப்படையான மற்றும் சிறந்த கட்டண திட்டங்கள் கொண்ட நிறுவனத்தின் விற்பனைச் செயல்முறையானது இந்த பயணத்தை எளிமையாக்கியது.
கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டபோதிலும், Blue Ocean குழுமமானது, எப்போதும் உயர்தரமான திட்டங்களை வழங்குவதை உறுதி செய்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், உலகளாவிய COVID-19 பெருந்தொற்று, முந்தைய அரசாங்கத்தின் அசாதாரணமான வட்டி விகிதங்கள் மற்றும் நாடு தழுவிய போராட்டங்கள் போன்ற வெளிப்புற காரணிகளால் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், எங்கள் பங்குதாரர்களின் பாதுகாப்பிற்கும், நல்வாழ்விற்கும், எப்போதும் முன்னுரிமை கொடுத்துள்ளோம்.
இந்த எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு மத்தியில் கூட, எங்கள் வாடிக்கையாளர்களுக்கான சொத்து பங்களிப்பு மதிப்பை நிலைத்திருக்க உறுதி செய்து, எங்கள் நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்களை எங்கள் பாரம்பரியத்தை விவரிக்கும் அதே அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதில் தொடர்ந்துள்ளோம்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
