கிளிநொச்சியில்1.9 கோடி ரூபா செலவில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம் திறப்பு
கிளிநொச்சி வைத்தியசாலையில் 1.9 கோடி ரூபாவில் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்ட வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்ட இரத்த சுத்திகரிப்பு தேவையுடையவர்கள் இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அதிகரித்த போக்குவரத்து செலவுகளை மேற்கொண்டு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வந்த நிலைமை இதன் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவி வந்த இக் குறைப்பாட்டை கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம் அவுஸே்ரேலிய மருத்துவ நலச் சங்கத்தின் நிதி அனுசரணையில் 1.9 கோடி ரூபா நிதிச் செலவில் 5 இரத்தச் சுத்திகரிப்பு இயந்திர தொகுதிகளை கொண்ட சிகிச்சை நிலையத்தை அமைத்துக்கொடுத்துள்ளனர்.
மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ். சுகந்தனின் (S.Sugandhan) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்எம். சமன்பந்துல சேனா (S.M.Samanbandhula Sena), கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் (Rupavathi Ketheeswaran), வடக்கு மாகாண
சுகாதார அமைச்சின் செயலாளர் பி. செந்தில்னந்தன் (B. Senthilnanthan), வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் (A. Ketheeswaran), யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி (T.Sathyamoorthy), பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந.சரவணபவன் (N. Saravanapavan) கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தின் தாலைவர் ஜெயசுந்தர (Jayasundera), மற்றுமு் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.















6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
