மல்லாவி வைத்தியசாலைக்கு ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி (Video)

Mullaitivu Canada
By Mayuri Nov 15, 2022 10:00 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் நேற்று (14.11.2022) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நன்மை கருதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சுமார் ஒரு கோடி 30 இலட்சம் ரூபாய் பெறுமதியில் இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பன மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பயனடையகூடிய வகையில் இவ்விரு இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறுநீரக நோயாளர்கள் வாரத்தில் இரண்டு தடவைகள் இரத்த சுத்திகரிப்புக்காக பெரும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை, வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை ஆகியவற்றுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்ற நிலைமை காணப்படுகிறது.

குறித்த சிறுநீரக சிகிச்சைப்பிரிவானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்ட போதும் அதன் செயற்பாடுகளுக்கு போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு இந்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என்பன வழங்கப்பட்டிருக்கின்றன.

மல்லாவி வைத்தியசாலைக்கு ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி (Video) | Blood Purification Activities At Mallavi Hospital

இதனை பயன்படுத்தி சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சை பெற இலகுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லாவி பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்திய அதிகாரி கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஸ்தாபகர் செந்தில்குமரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர் பயனாளர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். 

94 பேருடைய இருதய சத்திர சிகிச்சைகளுக்கான உதவிகள்

மல்லாவி வைத்தியசாலைக்கு ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி (Video) | Blood Purification Activities At Mallavi Hospital

இலங்கையின் பல பாகங்களிலும் இருதய நோய் உள்ள நோயாளர்களுக்கும் ஏனைய நோயால் வாடும் நோயாளிகளுக்கும் பலவிதமான மருத்து உதவிகள் செய்துவரும் செந்தில்குமரன் நிதியத்தால் இதுவரை 94 பேருடைய இருதய சத்திர சிகிச்சைகளுக்கான உதவிகள் வழங்கப்பட்டு அவர்களுடைய உயிர் காக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 200 குடும்பங்களுக்கு வாழ்வதார திட்டங்கள் மேற்கொண்டு தொடர்ச்சியாக செந்தில்குமரன் நிவாரண நிதியத்தினால் மேற்கொண்டு வருவதோடு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுதந்திரமாக நடமாட முடியாமல் இருக்கும் நோயாளிகளை அவர்கள் வீட்டிற்கே சென்று தாதியினை கொண்டு வழங்கும் சேவையான "நடமாடும் மருத்துவ சேவையினை" கிளிநொச்சியில் கடந்த 7 வருடமாக வெற்றிகரமாக செயல்படுத்தி  வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மல்லாவி வைத்தியசாலைக்கு ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி (Video) | Blood Purification Activities At Mallavi Hospital

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US