கந்தளாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு
கந்தளாய், செப்டம்பர் 18: 'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்' என்ற உயரிய கருப்பொருளின் கீழ், கந்தளாய் பிரதேச சபையினால் நேற்று (செப்டம்பர் 18) இரத்ததான முகாம் ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கந்தளாய் பிரதேச சபையின் பொது நூலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கந்தளாய், மூதூர் மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் நிலவும் கடுமையான இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்த மனிதாபிமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலை போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் சிறப்பு ஒத்துழைப்புடன், வைத்தியசாலை ஊழியர்கள் இந்த இரத்ததான நிகழ்வை திறம்பட வழிநடத்தினர்.
இதில் இளைஞர்கள், யுவதிகள், அரச ஊழியர்கள் மற்றும் முப்படையினர் என பலதரப்பட்டவர்களும் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கி, உயிர்களைக் காக்கும் அரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இந்த நிகழ்வு சமூக ஒற்றுமைக்கும், மனிதநேயத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
