தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில்"உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியத்தால் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்ததான முகாம்
இந்த இரத்ததான முகாமானது செப்டெம்பர் 24ஆம் திகதி மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே அனைத்து தரப்பினரையும் இந்த இரத்ததான முகாமில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



