மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற இரத்ததான முகாம்
யாழ்ப்பாணம் வடமராட்சி, கிழக்கு, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வைத்தியர் என்.நரேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஊழியர்கள் பங்கெடுத்திருந்த குறித்த நிகழ்வு, இன்று (17.01.2024) காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் ஓ பொசிட்டிவ் வகை குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களிடம் வேண்டுகோள்
குறித்த நிகழ்வில், வைத்தியர், வைத்தியசாலை ஊழியர்கள், சுகாதார பரிசோதகர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ந்தும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் இரத்தவங்கியில் குருதித்தட்டுப்பாடு நிலவுவதால் ஆர்வமுள்ள இரத்த கொடையாளர்கள் வைத்தியசாலையை தொடர்பு கொண்டு இரத்ததானம் செய்யுமாறு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வைத்தியர் என்.நரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




