வீதியை செப்பனிடுமாறு கோரி மக்கள் வீதியை மறித்து போராட்டம் (Video)
மன்னார் - தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர் சந்தியில் இருந்து தரவன்கோட்டை கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு கோரி குறித்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்தூர் சந்தியில் இருந்து தாழ்வுபாடு பிரதான வீதியை மறித்து நேற்று (02.11.2022) காலை 11.45 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 12.30 மணி வரை குறித்த பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில், மன்னார் உதவி பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு தமது பிரச்சினைகளை உதவி பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.
அபிவிருத்தி திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டது
மேலும், வீதி தொடர்பாக அங்கு வருகை தந்த மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் உதவி பிரதேச செயலாளரிடம் சில விடயங்களை முன் வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பல வீதிகள் அபிவிருத்தி திட்டத்திற்கு உள் வாங்கப்பட்டது.
அதன் போது அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஊடாக பல வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் இடம் பெற்றது.
மறுக்கப்பட்ட கோரிக்கை
இதன் அடிப்படையில் இந்த வீதியானது தனியார் ஒப்பந்ததாரரிடம் அபிவிருத்தி பணிக்கு கையளிக்கப்பட்டது. இவ்வாறு செப்பனிடப்படாத வீதியானது மன்னார் அபிவிருத்தி அதிகார சபை ஊடாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த வீதி ஒப்பந்ததாரருக்கு ஒரு தொகை பணம் வழங்கப்பட்டிருந்தும், மிகுதி பணம் வழங்கப்படவில்லை எனவும் இதனால் ஒப்பந்ததாரர் பணியை இடை நிறுத்தினார். இந்த நிலையில் வீதியின் நிலை தொடர்பாக அப்பகுதி மக்கள் மன்னார் நகர சபையிடம் முறையிட்டனர்.
மன்னார் நகர சபை பல்வேறு கூட்டங்களில் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வீதி தொடர்பாகவும் வீதியை முழுமையாக்கி தருமாறும் நகர சபை கோரி இருந்தது. எனினும் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை
கடிதம் சமர்ப்பிக்கப்படவில்லை
மன்னார் நகர சபை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரி இருந்தது. வீதியை செய்ய முடியாது இருந்தால் எழுத்து மூலம் சமர்ப்பிக்கும் படியும், குறித்த வீதியை நகரசபை செப்பனிடுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
எனினும் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் குறித்த வீதியை செப்பனிட மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மன்னார் நகரசபைக்கு எழுத்து மூலம் கடிதம் சமர்ப்பிக்கப்படவில்லை என சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினையை கேட்டறிந்த மன்னார் உதவி பிரதேச செயலாளர் துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாகும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மன்னார் நகர சபை மற்றும் மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோரை அழைத்து இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கூறினார்
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
