பிரித்தானியாவை அச்சுறுத்தும் பனிப்புயல் - உறைபனியில் மூழ்கப்போகும் நகரங்கள்
பிரித்தானியாவில் வானிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ள நிலையில் பனிப்புயல் தாக்கும் அபாயம் உள்ளதென வானிலை அவதான நிலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆர்க்டிக் பகுதியில் இருந்து வீசும் அதிவேகப் பனிப்புயல் காற்று இந்த வார இறுதியில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் 20 அங்குலங்கள் வரை பனி பொழிய காரணமாக இருக்கும் என வானிலை அவதான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானிய மக்களை உறைய வைக்கும் அளவிற்கு 0 வெப்பநிலை எட்டும் எனவும், 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் நாட்களில் ஸ்கொட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் அதிக உயரத்தில் பனி பொழியும் எனவும் இந்த காலநிலையில் தொடர்ந்து சில காலப்பகுதிக்கு நீடிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த வரும் சில தினங்களில் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் உறைபனியாகும் அளவிற்கு வெப்பநிலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் தெற்கே வசிக்கும் மக்கள் ஆறு சென்டிமீட்டர் பனிப்பொழிவு வரை பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
