ரஷ்ய தலைநகரில் குண்டு வெடிப்பு: மூத்த இராணுவ அதிகாரி பலி
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில்(Moscow) மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அந்நாட்டின் அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான மூத்த இராணுவ அதிகாரி உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் என்ற அதிகாரியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொஸ்கோ - ரியாசான்ஸ்கி ப்ரோஸ்பெக்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே வைத்து அவர் கொலை செய்யப்பட்டள்ளார்.
துணை அதிகாரி
மேலும் இதில் உயிரிழந்த மற்றுமொருவர், இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் துணை அதிகாரி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு துருப்புக்கள் மற்றும் கதிரியக்க, இரசாயன உயிரியல் மாசுபாட்டின் நிலைமைகளின் கீழ் செயல்படும் சிறப்புப் படைகள், குறித்த தாக்குதல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |