ஹம்பாந்தோட்டை விகாரையொன்றில் குண்டு வெடிப்பு
ஹம்பாந்தோட்டை அருகே அமைந்துள்ள விகாரையொன்றில் நேற்று (27) மாலை குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பெலியத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை குறித்த விகாரையின் காணியை சுத்திகரிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்ட போது, அதற்காகப் பயன்படுத்தப்பட்ட ட்ராக்டர் இழுவை வண்டியின் சக்கரத்தில் சிக்கி, கைக்குண்டொன்று பாரிய சப்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
இரண்டு கைக்குண்டுகள்
இதனையடுத்து உடனடியாக அவ்விடத்தில் தேடுதல் மேற்கொண்ட போது வெடிக்கும் நிலையில் இருந்த இன்னும் இரண்டு கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம், குண்டு செயலிழப்புப் பிரிவினர் அவ்விடத்துக்கு வந்து குண்டுகளை செயலிழக்கச் செய்துள்ளனர்.
குறித்த குண்டுகள் மிகப்பழைமையானவை என்று தெரிவிக்கப்படும் அதேவேளை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
