2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ள மின்வெட்டு! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Power cut Sri Lanka Public Utilities Commission of Sri Lanka Kanchana Wijesekera
By Chandramathi Aug 19, 2022 11:50 AM GMT
Report

நாட்டின் மின்சார விநியோகத்திற்காக உரிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படாவிட்டால் 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

மின்சார நுகர்வு

2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ள மின்வெட்டு! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Blackout Till 2027 Power Cut Sri Lanka Fuel Crisis

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார நுகர்வு 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தினசரி மின் நுகர்வு விகிதம் குறைந்தபட்சம் 48 மெகாவோட் என்றும், நண்பகல் நேரத்திற்கு 2,800 மெகாவோட் மின்சாரம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில், மின் நுகர்வு 38 முதல் 40 மெகாவோட் மணி வரை இருந்ததாகவும் கூறப்படுகின்றது. நண்பகல் நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 2,100 மெகாவோட்டாக குறைக்கப்பட்டது. இது 20% குறைப்பை பிரதிபலிக்கிறது என்று ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ள மின்வெட்டு! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Blackout Till 2027 Power Cut Sri Lanka Fuel Crisis

இதேவேளை நாட்டில் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இது தொடர்பான தீர்மானம் இலங்கை மின்சார சபையால் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழந்துள்ளதாகவும், அதன் கோளாறை கண்டறியும் பணியில் தொழில்நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டாவது தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்ற போதும் மூன்றாவது தொகுதி தொடர்ந்து இயங்கி வருகிறது.

மின் விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதிகரிக்கபட்டுள்ள மின்வெட்டு

2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ள மின்வெட்டு! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Blackout Till 2027 Power Cut Sri Lanka Fuel Crisis

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையிலேயே 2027 ஆம் ஆண்டு வரை பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.       

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US