தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள்

Sri Lankan Tamils Tamils Jaffna Vavuniya
By Theepan Jul 23, 2025 06:26 PM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் புதன்கிழமை (23) கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கொழும்பில் கைதான முன்னாள் போராளியால் சிக்கப்போகும் புலனாய்வு அதிகாரிகள்

கொழும்பில் கைதான முன்னாள் போராளியால் சிக்கப்போகும் புலனாய்வு அதிகாரிகள்

 கறுப்பு ஜூலை

1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள் | Black July Sri Lanka

நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள் | Black July Sri Lanka

 திருகோணமலை

இன அழிப்புகளில் ஒன்றான கறுப்பு ஜூலையை நினைவு கூறும் முகமாக பொது நினைவேந்தல் நிகழ்வு இன்று (23.07.2025) மாலை திருகோணமலை கடற்கரையில் உள்ள வெளிக்கடை தியாகிகள் அரங்கில் இடம் பெற்றது.

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள் | Black July Sri Lanka

குறித்த நினைவேந்தலை ஈகை சுடரேற்றி உணர்வு பூர்வமாக நினைவேந்தினர் இதன் போது இதில் கலந்து கொண்டவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

1983 களில் தமிழர்களுடை வாழ்வியலை அளித்த ஜூலை கலவரம் தமிழர்களுடைய பரப்பில் காணப்படுகிறது.

முன்னாள் போராளி வழங்கிய தகவல்! வவுனியாவில் மேலும் இருவர் கைது

முன்னாள் போராளி வழங்கிய தகவல்! வவுனியாவில் மேலும் இருவர் கைது

கரி நாள்

தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் தங்களுடைய வாழ்வை அலங்கோலமாக்கி அலைந்து திரிந்து உடமைகளை உயிரை இழந்து புலம்பெயர் தேசங்களுக்கு கூடுதலான தமிழர்கள் இடம் பெயர்ந்து தமிழர்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்து அல்லோல கல்லோலப்பட்ட நாள் ஒன்றினை இன்னுமொரு யுகத்துக்கும் சந்ததிக்கும் நினைவுபடுத்தி கடத்திச் செல்கின்ற அந்த நிகழ்வை திருகோணமலையில் இங்கு செய்கின்றோம்.

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள் | Black July Sri Lanka

இந்த நாள் தமிழர்களுடைய ஒரு கரி நாளாக தமிழர்களுடைய வாழ்வில் இனப்படுகொலையின் ஆரம்ப நாளாக இதனை பார்க்கின்றோம்.

தமிழர்களுடைய வாழ்வியல் பரப்பில் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன ஜூலை 23 தொடங்கிய கலவரம் அதற்கு பின்னர் பல்வேறு நாட்கள் இடம் பெற்று தமிழர்களை சிதலம் சிதலமாக பாலம் பாலமாக அவர்களுடைம பண்பாட்டியலையும் வாழ்வியலையும் கூறு போட்ட நிகழ்வாக திருகோணமலை நண்பர்கள் வட்டம் சார்பாக நினைவு கூறுகிறோம்.

றீச்சாவில் பணிபுரிய அரிய வாய்ப்பு! முந்திக்கொள்ளுங்கள்...

றீச்சாவில் பணிபுரிய அரிய வாய்ப்பு! முந்திக்கொள்ளுங்கள்...

செய்தி- ரொசான்

வவுனியா

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியாவில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபி முன்பாக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சு.தவபாலன் தலைமையில் இந்நிகழ்வு இன்று (23.07) இடம்பெற்றது.

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள் | Black July Sri Lanka

இதன்போது படுகொலையின் போது மரணித்த உறவுகளுக்காக கறுப்பு யூலை படுகொலை பதாதைக்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கறுப்பு யூலை படுகொலை தொடர்பில் கருத்துரைகளும் இடம்பெற்றன.

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள் | Black July Sri Lanka

இந்நிகழ்வில் வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா மாநகர சபை உறுப்பினர் தர்மரட்ணம், வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சஞ்சுதன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

செய்தி- வசந்த ரூபன்

காரைதீவு

கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 ஆவது வருடத்தை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு நேற்ற (23) மாலை காரைதீவில் நடைபெற்றது.

1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்து ஈழத்தமிழர்களின் இன படுகொலைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்சுரன் தலைமையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

இங்கு காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள் | Black July Sri Lanka

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தவிசாளர் பாஸ்கரன், காரைதீவு எல்லையில் கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு மறக்கவும் முடியாத மன்னிக்கவும் முடியாத இந்த துயரான நாளானது 42 வருடங்களாக மறக்க வும் முடியாமல் காணப்படுகின்றது.

1983 ஜூலை 23 தொடக்கம் 30 காலப்பகுதியில் இனப்படுகொலை அதாவது தமிழினத்தின் படு கொலை மிகவும் கொடூரமாக காணப்பட்டது.

தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்கள் | Black July Sri Lanka

சிங்களவர் மட்டுமே வாழ வேண்டும் என்றிருந்த ஒரு காலகட்டத்திலே எங்களது உடமைகளும் உயிர்களும் சொத்துக்களும் பறிபோகப்பட்ட அந்த கறுப்பு ஜூலையை நாங்கள் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய வர்களாக இருக்கின்றோம்.அதேபோல் அந்த கறுப்பு ஜூ லையை ஒத்ததாக தான் அண்மை யில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வாக இருக்கட்டும் ஏன் தம்பி பாலகுமாரன் இசைப்பிரியா போன்றவர்களது சாவும் கூட மிகவும் கொடூரமாகவும் வருந்தத் தக்கதாகவும் இருக்கின்றது.

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மாறி மாறி வருகின்ற சிங்கள ஆட் சியாளர்கள் இதனை கண்டு கொள் வதில்லை. இதை நிறுத்த வேண்டும் இதற்கு உடனடியாக தடை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். எங்களது இனம் தமிழினம் இந்த திருநாட் டிலே தலை நிமிர்ந்து வாழ்வதற்குஒரு வழி சமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாறுக் ஷிஹான்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US