யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசு முடிவு
இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக இந்த முறை கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுப்பது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து தமிழர் தாயகத்தில் இந்த முறை போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
கடும் சட்ட நடவடிக்கை
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அண்மைய கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட சுதந்திர தினத்தன்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஒளிப்படங்களுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழகத்துக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
எனினும், யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அண்மைய கலந்துரையாடலில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறாமல் எவ்வாறு தவிர்ப்பது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாகவும் விசேட அறிக்கையொன்றை வழங்குமாறு பல்கலைக்கழகத்தைக் கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை அரச சொத்துக்கள்! சிக்கலில் இருந்து தப்பிக்க நாமல் தீட்டும் சதித்திட்டம்
மஹா சிவராத்திரி 2026 நேரலை
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan