மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டம்! அநுர அரசாங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு
மலையக மக்களுக்கு சரியான வீட்டுத்திட்டத்தை எவ்வாறு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியான திட்டத்தை சமந்த வித்யாரத்ன மற்றும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு முன்னெடுத்து வருவதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் சிவநேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இரண்டு மாதங்களில் திறந்து வைக்கப்பட உ்ள்ள கபரபல வீட்டுத்திட்டம் ஒரு முன்மாதியான செயற்றிட்டமாக மாறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,இத்தனை வருடங்களாக வீடுகளை அமைத்தோம் என்று கூறிக்கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.வந்து பாருங்கள் மக்களுக்கு எவ்வாறு சரியான வீட்டுத்திட்டத்தை அமைப்பது என்று.
வீடமைப்பு திட்டத்திலோ, அடிப்படை வசதிகள் வழங்குவதிலோ எமது அமைச்சு மற்றும் அரசாங்கம் எந்தவித இலாபத்தையும் பெறப்போவதில்லை.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு உணர்வு பூர்வமாக மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.