மக்களை கொன்று அரசியல் செய்யாதே: மன்னாரில் அரசுக்கு எதிராக கறுப்பு பட்டி அணிந்து போராட்டம் (Photos)
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் 48வது அமர்வு இன்று காலை மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது சபையின் 25 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். சபை உறுப்பினர்கள் சபையில் கருப்பு பட்டி அணிந்து அரசுக்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சபை அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக அரசுக்கு எதிராக மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்து பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரத்தவெறி பிடித்தவனே நாட்டை விட்டு வெளியேறு, மக்களை பட்டினிச்சாவில்
தள்ளாதே, மக்களை கொன்று அரசியல் செய்யாதே, விவசாயத்தில் கை வைத்து நாட்டை
அழிக்காதே,சொந்த மக்களைச் சுட்டுத் தள்ளாதே உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதிய
பதாகைகளை ஏந்தியவாறு மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில்
ஈடுபட்ட மை குறிப்பிடத்தக்கது.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri