நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள பயோமெட்ரிக் கடவுச்சீட்டுக்கள்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் ஜனவரி, 2025 முதல் இலத்திரனியல் தட்டுகள்(Ships) உட்பொதிக்கப்பட்ட பயோமெட்ரிக் (Biometrics) கடவுச்சீட்டுகளை வழங்கத் தயாராகி வருகிறது.
இந்தநிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கான முன்பதிவு செயல்முறை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு
கொழும்பிற்கு வெளியே வசிக்கும் மக்களுக்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்களையும் குடிவரவுத்திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக சுமார் 5 மில்லியன் பயோமெற்றிக் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரம் கடந்த ஜனவரியில் கோரப்பட்டது.

எனினும் சில மேம்படுத்தல்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் செல்லலாம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பயோமெட்ரிக் அணுகல் தொடர்பான விடங்களில் ஜப்பான் மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு என்பன இலங்கைக்கு ஆதரவளிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam