அரசாங்கம் அமைதியான முறையில் தேர்தலை நடத்திக் காட்டியுள்ளது: பிமல் ரத்நாயக்க
முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைதியான தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்திக் காட்டியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தன் குடும்பத்தினர் சகிதம் வாக்களிக்க வந்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அமைதியான முறையில் தேர்தல்
அவர் மேலும் கூறுகையில், கடந்த காலங்களை விட நாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. தேர்தல் ஒன்று நடைபெறுகின்றதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இன்று அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அரசாங்கம் அந்தளவுக்கு அமைதியான தேர்தல் ஒன்றை நடத்திக் காட்டியுள்ளது. படிப்படியாக ஏனைய விடயங்களிலும் இந்த நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |