சொன்னோம்.. செய்தோம்.. பிமலின் அதிரடி பதிவு!
நாடாளுமன்றத்தில் உணவுகளின் விலையை அதிகரிப்பதாக கூறியதை செய்து காட்டினோம் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை முகநூலில் இன்றையதினம்(05.02.2025) அவர் பகிர்ந்துள்ளார்.
குறித்த பதிவில் உணவுகளின் கைச்சாத்துக்கள் உள்ளடங்கிய புகைப்படங்கள் பிமல் ரத்நாயக்கவால் பகிரப்பட்டுள்ளன.
அவைக் குழுவின் தீர்மானம்
இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தனது உணவிற்காக இன்றுமுதல் 2,000 ரூபாவை செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் தனது உணவிற்காக இன்று(05.02.2025) முதல் 2,000 ரூபாவை செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 450 ரூபாவாக இருந்த இந்த கட்டணம், அவைக் குழுவின் தீர்மானத்தின் படி, 2,000 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி, காலை உணவு 600 ரூபாவாகவும் மதிய உணவு 1,200 ரூபாவாகவும் மாலைத் தேநீர் 200 ரூபாவாகவும் மாற்றப்பட்டுள்ளது.
You May Like This
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |