காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியாது..! பிமல் உறுதி
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடியாது.அதில் எவ்வித இலாபமும் பெற முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி கேட்ட ஏழு கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு
தொடர்ந்துரையாற்றிய அவர், காங்கேசன்துறை துறைமுகம் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு பிரதேச துறைமுகமாகும்.

அது குறித்த பகுதியின் சேவைகளை நிறைவேற்றக் கூடிய வகையில் அமைந்ததாகும். சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் இல்லை என்பதே இன்றைய கணிப்பீடாகும்.
பலாலி விமான நிலையம் ஓரளவு இலாபம் தரக் கூடிய நிலையில் இருக்கிறது.
மேலும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு செலவு செய்தாலும் வர்த்தக துறைமுகமாக மாற்றி இலாம் ஈட்ட முடியாத நிலைமை காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |