மாத்தளை மனித புதைகுழி குற்றவாளிகளின் வாரிசுகள் நாடாளுமன்றில்.. சபை முதல்வரின் பரபரப்பு தகவல்
மாத்தளை மனித புதைக்குழியில் 140 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதானிக்கு அறிவித்துள்ளோம். இது தொடர்பில் நாம் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட் வதைமுகாம்கள்
தொடர்ந்து பேசிய பிமல் ரத்நாயக்க, மாத்தளை மனித புதைகுழி கொலைகளை செய்தவரின் வாரிசுகள் நாடாளுமன்றத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.
அப்போது ரோஹினி கவிரத்ன எம்.பி எழுந்து, தன்னை குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார்.
அச்சந்தர்ப்பத்தில் பிமல் ரத்நாயக்க எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பவர்கள் சிலர் தனியாக வதைமுகாம்கள் நடத்தியவர்கள் என்றார்.
அதற்கு தயாசிறி ஜயசேகர குறிக்கிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதற்கு எதிர்மாறாக பிமல் ரத்நாயக்க, 87-88-89 காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அக் கட்சியில் அன்று இருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தனி வதை முகாம்களை நடத்தி வந்தனர் என்று மீண்டும் சுட்டிக்காட்டினார்.




