பிமலின் பொறுப்பில் சுங்கம் இருக்கவில்லை.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
சுங்கத்துறை பிமல் ரத்நாயக்க வகித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் இருக்கவில்லை என அரசாங்க தரப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் சில வேளை இந்த குழப்பத்தை ஊடகமும் செய்கிறது. எதிர்க்கட்சியும் செய்கிறது என கூறியுள்ளார்.
வெளியேற்றப்பட்ட கொள்கலன்கள்
தொடர்ந்துரையாற்றிய அவர், "இதனால் மக்களின் மனமும் குழப்பத்தில் ஆழ்த்தப்படுகிறது. சுங்கம் மற்றும் துறைமுகங்கள் என்பது இருவேறான அமைச்சுகளுக்கு உரித்துடையதாகும்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் வெளியேற்றப்பட்ட எவ்வித கொள்கலன்களும் இல்லை. பிரபலமானவர்களுக்கே கல்லெறியப்படும். நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்க்கட்சிக்கள் பொய்களை உண்மையாக்கவதையே வேலையாக செய்தனர்.
நாம் அவற்றை உடைத்து சுக்குநூறாக்கியுள்ளோம். இந்த அமைச்சுக்களுடன் விரைவான பயணம் செல்ல வேண்டியுள்ளது. 2026ஆம் ஆண்டு முதல் வீழ்ந்த நாட்டை விரைவாக மீட்பதற்கான திட்டமாகவே அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri