ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல்
ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை(15) நடைப்பெற்றுள்ளது.
வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய விவகாரப் பிரிவின் உதவி அமைச்சர் கானோ டேகிரோ தலைமையில் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் மூத்த பிரதிநிதிகளுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை குழுவினர்
இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக் குழுவில் கலந்துக்கொண்டுள்ளனர்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இதன்போது, இருதரப்பு அரசியல்,பொருளாதாரம்,பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் மக்களுடனான உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பான விவாதங்களில் கவனம் செலுத்தியுள்ளனர்.



