திருகோணமலையில் கால்நடையுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இருவர் படுகாயம்
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி கம்பகொட்ட பகுதியில் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து -மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மட்டக்களப்பு - பாரதி லேன் பகுதியில் வசித்து வரும் யோகநாதன் அசோக்குமார் (40வயது) மற்றும் சுப்ரமணியம் சிவசுப்ரமணியம் (44வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக சிகிச்சை
காயமடைந்த இருவரையும் மொரவெவ பொலிஸார் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களின் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |